புதன், 3 ஜூலை, 2024

நாகூர் ஞானாசிரியர் ஹஜ்ரத் சொன்னதிலிருந்து....


வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டியது, வெற்றியின் பாதை உருவாக்கும் 

பொக்கிஷம், மனிதனாக இருந்து புனிதனாக மாற்றும் திறவுகோல்கள், படித்து வாழ்வில் பயன்படுத்தியவர் ஈடேற்றம் பெற்றார்.


செய்ய வேண்டியது / Do's


1. எப்போதும் Quick Decision எடுக்கவும், அது தவறாக அமைந்தாலும் சரி.


2. தீர்மானித்துவிட்ட சின்னசின்னக் காரியங்களைக் கண்டிப்பாக முடித்துப் பழக வேண்டும்.


3. ஒரு காரியம் தோல்வியுற்றால் அதை உடனே மறுபடி முயற்சி செய்யாமல் கொஞ்சம் gap கொடுத்து முயற்சி பண்ணவும். (மறுபடி முயற்சி பண்ணுமுன் ரிலாக்ஸ்டாக அமர்ந்து மனதை மாற்றிக்கொள்ளவும்.)


4. எந்தெந்த காரியம் நாமாகச் செய்தது, எவையெவை தானகவே - நம் முயற்சியின்றி - நடந்தது என்று குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.


5. ஒரு பிரச்சனை வந்தால் குளித்துவிட்டு (ரிலாக்ஸ் செய்து) அந்த பிரச்சனையை மறந்துவிடவும். தீர்வு தானக வரும்.


6. தெளிவாகவும் சுருக்கமாகவும் நிதானமாகவும் பேசவேண்டும்


7. நெகடிவான எண்ணங்கள் வரும்போது முதலில் எண்ணத்தையே தடுத்து நிறுத்திவிடவேண்டும்


8. பணம் வரும்போது ஏற்கனவே போட்ட திட்டப்படிதான் செலவு செய்யவேண்டும்.


9. நாளைய செயல்பாடுகளை இன்றைய இரவு மனதிலோ தாளிலோ குறித்துவைக்க வேண்டும். மறுநாள் செய்தோமோ என்றும் தானகவே குறித்துவைத்தது நினைவுக்கு வந்ததா என்றும் செக் பண்ணிக்கொள்ள வேண்டும்.


10. தவறுதலாக வாழ்ந்துவிட்ட கடந்த காலத்தை சரியாக வாழ்ந்ததாக மறுபடியும் கற்பனையில் வாழ்ந்து (நினைத்து) பார்ப்பது தன்னம்பிக்கையை வளர்க்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக