திங்கள், 12 அக்டோபர், 2015

பேரீச்சை வளர்ப்பு அதிக லாபம் தரும்!

பாலைவனத்தில் விளையக்கூடிய பயிரான பேரீச்சையை நமது மண்ணிலும் விளைவிக்கலாம். உரிய முறையில் பேரிச்சையை சாகுபடி செய்து மார்க்கெட்டிங் செய்தால் லாபத்தில் அசத்தலாம் என்கிறார் திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையத்தை சேர்ந்த கே.ஜி.டேட்ஸ் உரிமையாளர் முருகவேல். அவர் கூறியதாவது: ஆரம்பத்தில் ரெடிமேடு ஆடை தயாரிப்பு தொழில் செய்தேன். அதில் பெருமளவு நஷ்டம் ஏற்பட்டது. வேறு சில தொழில்களிலும் ஈடுபட்டு அதிலும் நஷ்டம் ஏற்பட்டு பணம் எல்லாம் இழந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடியை சேர்ந்த அன்பழகன் என்ற விவசாயி புதிய ரக திசு பேரீச்சையை வளர்த்து லாபம் சம்பாதிப்பது பற்றி தெரிய வந்தது. அங்கு சென்று விவரங்களை கேட்டேன். 
நிச்சயம் இதில் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என நம்பிக்கை துளிர்த்தது. கையில் காசில்லாத நிலையில், இடத்தை விற்று பேரீச்சை சாகுபடியில் ஈடுபட்டேன். இது புது வகையான திசு வளர்ப்பு பேரீச்சை. இந்தியாவில் இந்த கன்று உற்பத்தி கிடையாது. இங்கிலாந்தில் மட்டும் ஆய்வுக்கூடங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த திசு கன்றுகள் வளைகுடா நாடுகளில் பராமரிக்கப்பட்டு, பின் இந்தியா கொண்டு வரப்படுகிறது. குஜராத் வேளாண் பல்கலைக்கழகத்தில் இருந்து கன்றுகளை பெற்றேன். 
முருகம்பாளையத்தில் 2.5 ஏக்கரில் 200 திசு வளர்ப்பு பேரீச்சை கன்றுகளை, 2009ம் ஆண்டு பிப்ரவரியில் நடவு செய்தேன். பாலைவனத்தில் விளையும் சாதாரண பேரீச்சைக்கு தண்ணீர் தேவையில்லை. ஆனால் திசு பேரீச்சைக்கு தண்ணீர் தேவை. சொட்டு நீர் பாசன முறையில் நீர் பாய்ச்ச வேண்டும். மூன்று ஆண்டுகளில் காய்க்க தொடங்கி விடும். முறையான பராமரிப்பு காரணமாக எங்கள் தோட்டத்தில் 28 மாதங்களிலேயே காய்க்க துவங்கியது. பராமரிப்பு மட்டும் சரியாக இருந்தால் ஒரு ஏக்கரில், மூன்றாம் ஆண்டில் இருந்து நல்ல வருவாய் கிடைக்கும். 
ரூ.8 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருஷம்தோறும் வருமானம் பார்க்க முடியும். ஆரம்ப கட்ட முதலீட்டை முதல் அறுவடையிலேயே பெற்றுவிடலாம். பிறகு, பராமரிப்பு மட்டும் செய்தால் போதும். வேறு எந்த விவசாயத்திலும் இதுபோன்று லாபம் பார்க்க முடியாது. பேரீச்சையை பொருத்தவரை, டேனின் என்ற வேதிப்பொருள் அதிகம் இருப்பதால் அதை அப்படியே உட்கொள்ள முடிவதில்லை. எனவே பதப்படுத்தப்பட்ட பழங்களே சந்தைக்கு வருகின்றன. இதற்கு முற்றிலும் மாறாக, திசு வளர்ப்பு முறையில் உருவாக்கப்படும் பர்ரி வகை பேரீச்சைகளை அப்படியே சாப்பிடலாம். 
இவை இரும்பு சத்து மிக்கவை. சிறிய விவசாயிகள் இதை பயிரிட்டு அதிக லாபம் பார்க்கலாம். விவசாயம் தெரியாத இளைஞர்கள்கூட முறைப்படி கற்றுக்கொண்டால், இது சிறந்த தொழில். கோவை மண்டலத்தில் முதலாவதாகவும், தென்னிந்தியாவில் இரண்டாவதாகவும் எங்களது திசு வளர்ப்பு பேரீச்சை பண்ணை உள்ளது. திருப்பூர் கலெக்டர் எங்கள் பண்ணைக்கு வந்து பார்வையிட்டு பாராட்டினார். 
முதலீடு 

ஒரு பேரீச்சை கன்றின் விலை ரூ.3,500. ஒரு ஏக்கரில் 70 கன்றுகளுக்கான செலவு ரூ.2 லட்சத்து 45 ஆயிரம். சொட்டு நீர் பாசன குழாய்களுக்கான செலவு ரூ.30 ஆயிரம். ஆரம்ப கட்ட முதலீடு இவைதான். ஆண்டுக்கொருமுறை இயற்கை உரத்துக்கு ஆகும் செலவு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம். தினசரி தண்ணீர் விட்டு, வண்டுகளை விரட்டவும், கனிகளை பறித்து பேக்கிங் செய்யவும் அதிகபட்சம் 2 பேர் போதும். கைக்கு எட்டும் தூரத்தில் பழங்கள் இருப்பதால், பறிக்க நிறைய பேர் தேவையில்லை. இவர்களுக்கு கூலி வருடத்துக்கு ரூ.1 லட்சம் வரை செலவாகிறது. 
லாபம்! 

பயிர் செய்த மூன்றாவது வருடத்தில் இருந்து காய்க்க துவங்கும். ஜூலை முதல் ஆகஸ்ட் வரை சீசன். ஒரு மரத்துக்கு 5 முதல் 7 குலைகள் வரை தள்ளும். ஒரு குலையில் 10 கிலோ வரை பழங்கள் கிடைக்கும். சராசரியாக ஒரு மரத்துக்கு 60 கிலோ கிடைத்தாலும், ஏக்கருக்கு 4200 கிலோ கிடைக்கும். கிலோ 300 ரூபாய்க்கு விற்றால், ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் கிடைக்கும். உரம், பராமரிப்பு, கூலியாட்கள் செலவு, பேக்கிங் செலவு போக வருடத்துக்கு சுமார் 10 லட்ச ரூபாய் லாபம் பார்க்கலாம். தென்னை மரத்தை விட அதிகமாக 75 வருடங்களுக்கு மேல் விளைச்சல் இருக்கும். ஆண்டுகள் ஆக ஆக பழங்களின் எடையும் அதிகரிக்கும். ஆர்டரின்பேரில் குஜராத்தில் இருந்து நாற்றுகளை வாங்கி கொடுத்து கமிஷன் பெற்றும் வருமானம் ஈட்டலாம். 
சந்தை வாய்ப்பு! 

உலக பேரீச்சை உற்பத்தியில் 36 சதவீதம் இந்திய சந்தையில்தான் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் உள்நாட்டு உற்பத்தி இன்னும் ஒரு சதவீத அளவைக்கூட எட்டவில்லை. இதனால் பேரீச்சைக்கு சந்தை வாய்ப்பு இங்கு பிரகாசமாக இருக்கிறது. பழங்களை உள்ளூர் வியாபாரிகளும், நகரங்களில் உள்ள மொத்த வியாபாரிகளும் வாங்கி செல்கின்றனர். ஒருமுறை இதன் சுவை அறிந்தவர்கள் தேடி வந்து வாங்குவார்கள். கால், அரை, ஒரு கிலோ பாக்கெட்களாக விற்கலாம். குறிப்பாக வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் இதை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இதனால் ஏற்றுமதி வாய்ப்பும் அதிகம். 
பயிரிடும் முறை! 

ஒரு ஏக்கரில் சுமார் 70 கன்றுகளை நடலாம். ஒரு கன்றுக்கும் மற்றொன்றுக்கும் குறைந்தது 8 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். சுமார் 30 டிகிரி செல்சியஸ் வெப் பம் போதுமானது. சொட்டுநீர் பாசன முறையில் ஆரம்பத்தில் தினசரி ஒரு மரத்துக்கு 50 லிட்டர் தண்ணீர் விடவேண்டும். படிப்படியாக இதை அதிகரித்து, நன்கு வளர்ந்த மரத்துக்கு தினசரி 300 லிட்டர் தண்ணீர் விடவேண்டும். மரத்தின் அடியில் தண்ணீர் தேங்காமல், வடிகால் அமைக்க வேண்டும். 
மருந்து கூடாது! 

வண்டுகளால் மரத்துக்கு பாதிப்பு ஏற்படலாம். இதை தடுக்க எவ்வித மருந்தும் தெளிக்க கூடாது. மரத்தில் இருந்து பழங்களை பறித்து அப்படியே சாப்பிடலாம் என்பதால் மருந்து தெளிக்க கூடாது. தோட்டத்துக்கு 2 ஆட்களை நியமித்து, கண்காணிக்க வேண்டும். ஆரம்பத்தில் ஓரிரு வண்டுகள்தான் வரும். இதை அப்போதே கண்டுபிடித்து கொன்று விடுவது முக்கியம். இல்லையென்றால் வண்டுகள் தொல்லை அதிகரித்து விடும். இயற்கை உரமே இட வேண்டும். பேரீச்சை பழுத்ததும் வவ்வால், பறவைகளால் சேதம் ஏற்படாமல் இருக்க குலையை சுற்றி பாலிதீன் கவர்களால் மூட வேண்டும். 
பர்ரியின் சிறப்புகள்! 

பிஞ்சு முதல் பழம் வரை 6 நிலைகளாக பர்ரி பேரீச்சை பிரிக்கப்படுகிறது. 19 முதல் 23 வார மஞ்சள் நிற பழம் 3வது நிலை. இது கலால் எனப்படுகிறது. இதை மரத்தில் இருந்து பறித்தவுடன் அப்படியே சாப்பிடலாம். பர்ரி என்றால், அரபு மொழியில் பெரியது என்று அர்த்தம். பெரிய காய்களுடன் கூடிய பேரீச்சை என்பதால், இப்படி அழைக்கப்படுகிறது. இதன் தாயகம் ஈராக். ஜோர்டான் நாட்டில் இந்த பர்ரி ரக பேரீச்சையை கோல்டன் டேட்ஸ் என்று அழைக்கிறார்கள். அறுவடை செய்யப்பட்ட பழங்களை 3 மாதம் வரை இருப்பு வைக்கலாம். குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும். பேரிட்சை வளர்ப்பு விபரங்கள் இந்த இணைப்பில் உள்ள கட்டுரை பேரிட்சை வளர்ப்பு குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்யும்,. டேட்ஸ்-பேரிச்சை, விற்பனை வாய்ப்பு அதிகமுள்ள பர்ரி ரக பேரிச்சை, அவிநாசி அருகே 3 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரக பேரிச்சை மரங்களை தோட்டக்கலைத் துறை மூலம் மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் நடவு செய்ய திருப்பூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இப் பேரிச்சை பழங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. வளைகுடா நாடுகளிலும், இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகளவில் பேரிச்சை சாகுபடி செய்யப்படுகிறது. அப் பகுதிகளில் உலர்ந்த பேரிச்சை பழங்களே உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக பர்ரி என்ற புதிய பேரிச்சை ரகங்கள் திருப்பூர் மாவட்டத்தில் நடவு செய்யப்பட்டுள்ளன. அவிநாசி தாலுகா வஞ்சிபாளையத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டுள்ள இப் பேரிச்சை மரங்கள் மூலம், ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வரை வருமானம் பெற முடியும் என்கிறார் அதன் உரிமையாளர் முருகவேல். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு திசு வளர்ப்பு முறையில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த ரக பேரிச்சை மரங்களை அதிகளவில் நோய் தாக்குவதில்லை. சரியான இடைவெளியுடன் ஒரு ஏக்கரில் சுமார் 70 மரங்கள் நடவு செய்ய முடியும். நடவு செய்த 3 ஆண்டுகளில் அறுவடைக்குத் தயாராகும் இப் பேரிச்சை மரங்கள் மூலம் முதலாண்டில் 25 முதல் 30 கிலோ வரையிலும், அடுத்து வரும் ஆண்டுகளில் 30 முதல் 200 கிலோ வரையிலும் விளைச்சல் கிடைக்கும். புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் என மனித உடலுக்குத் தேவையான சத்துகள் நிறைந்துள்ள இப் பேரிச்சைப் பழ மரங்களுக்கு தென்னையை விட அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. இருப்பினும், நுகர்வோர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் இந்த ரக பேரிச்சைப் பழங்களால் அதிக லாபம் பெற முடியும் என்றார். திருப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், ஆட்சியர் சி.சமயமூர்த்தியிடம் இப் பேரிச்சை பழங்களின் சிறப்புகள் குறித்து அவர் விளக்கினார். மேலும், தோட்டக்கலைத் துறை மூலம் இந்த ரக பேரிச்சை மரங்களை மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் நடவு செய்யவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முருகவேல் வலியுறுத்தினர். வஞ்சிபாளையத்தில் பர்ரி ரக பேரிச்சை மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ள பகுதியை தோட்டக்கலைத் துறை சார்பில் ஆய்வு செய்து, மாவட்டத்தின் பிறபகுதி விவசாய நிலங்களிலும் இப் பேரிச்சைகளை நடவு செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார் ஆட்சியர். பட்டையைக் கிளப்பும் பர்ரி பேரீச்சை இந்த இணைப்பில் உள்ள கட்டுரை பேரிட்சை வளர்ப்பு குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்யும்,. டேட்ஸ்-பேரிச்சை, விற்பனை வாய்ப்பு அதிகமுள்ள பர்ரி ரக பேரிச்சை, அவிநாசி அருகே 3 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரக பேரிச்சை மரங்களை தோட்டக்கலைத் துறை மூலம் மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் நடவு செய்ய திருப்பூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இப் பேரிச்சை பழங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. வளைகுடா நாடுகளிலும், இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகளவில் பேரிச்சை சாகுபடி செய்யப்படுகிறது. அப் பகுதிகளில் உலர்ந்த பேரிச்சை பழங்களே உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக பர்ரி என்ற புதிய பேரிச்சை ரகங்கள் திருப்பூர் மாவட்டத்தில் நடவு செய்யப்பட்டுள்ளன. அவிநாசி தாலுகா வஞ்சிபாளையத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டுள்ள இப் பேரிச்சை மரங்கள் மூலம், ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வரை வருமானம் பெற முடியும் என்கிறார் அதன் உரிமையாளர் முருகவேல். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு திசு வளர்ப்பு முறையில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த ரக பேரிச்சை மரங்களை அதிகளவில் நோய் தாக்குவதில்லை. சரியான இடைவெளியுடன் ஒரு ஏக்கரில் சுமார் 70 மரங்கள் நடவு செய்ய முடியும். நடவு செய்த 3 ஆண்டுகளில் அறுவடைக்குத் தயாராகும் இப் பேரிச்சை மரங்கள் மூலம் முதலாண்டில் 25 முதல் 30 கிலோ வரையிலும், அடுத்து வரும் ஆண்டுகளில் 30 முதல் 200 கிலோ வரையிலும் விளைச்சல் கிடைக்கும். புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் என மனித உடலுக்குத் தேவையான சத்துகள் நிறைந்துள்ள இப் பேரிச்சைப் பழ மரங்களுக்கு தென்னையை விட அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. இருப்பினும், நுகர்வோர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் இந்த ரக பேரிச்சைப் பழங்களால் அதிக லாபம் பெற முடியும் என்றார். திருப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், ஆட்சியர் சி.சமயமூர்த்தியிடம் இப் பேரிச்சை பழங்களின் சிறப்புகள் குறித்து அவர் விளக்கினார். மேலும், தோட்டக்கலைத் துறை மூலம் இந்த ரக பேரிச்சை மரங்களை மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் நடவு செய்யவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முருகவேல் வலியுறுத்தினர். வஞ்சிபாளையத்தில் பர்ரி ரக பேரிச்சை மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ள பகுதியை தோட்டக்கலைத் துறை சார்பில் ஆய்வு செய்து, மாவட்டத்தின் பிறபகுதி விவசாய நிலங்களிலும் இப் பேரிச்சைகளை நடவு செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார் ஆட்சியர். பட்டையைக் கிளப்பும் பர்ரி பேரீச்சை

பெருத்த லாபம் தரும் பெரு நெல்லி + சப்போட்டா கூட்டணி


நாகர்கோவிலில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மேல தெரிசனங்கோப்பு.தென்னை, பெருநெல்லி என தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்கிறார் மணியன்.“கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த காலகட்டத்திலேலே அப்பாவோட சேர்ந்து விவசாயத்தையும் பார்த்து கொண்டுதான் இருந்தேன். அந்த நேரத்தில் எங்களுக்கு முழுக்க நெல் விவசாயம்தான.கட்டுபடியான விலையில்லை, வேலையாட்கள் பற்றாக்குறைனு ஏகப்பட்ட பிரச்சனை.அதனால் கொஞ்சம் இடத்தில் தென்னை, வாழையை சாகுபடி செய்தோம்.எங்கள் பகுதியில் அதிகமாக காற்று வீசுகிற பகுதி. அதனால் வாழை மரங்கள் சரிந்து பெருந்தொல்லையாக இருந்தது.அந்த சமயத்தில்தான் தற்செயலாக பெருநெல்லி தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டேன். அதுதொடர்பானத்தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொண்டு வந்த நான்,உடனடியா சாகுபடியிலும் இறங்கிவிட்டேன்.
எனக்கு இயற்கை விவசாயத்தில் ஆர்வம்  அதிகம்.நெல்லி போடணும்னு முழவு எடுத்ததும் என்னோட ரெண்டு ஏக்கர் நிலத்தை இயற்கை விவசாயத்துக்குத் தயார்படுத்தினேன். ஒரு வருடத்துக்கு எந்த விவசாயமும் பண்ணாமல், தழைச்சத்துக்காக சணப்பு விதைத்து, மடக்கி உழுது போட்டேன்.நன்றாக பக்குவப்பட்டதும், சோதனை அடிப்படையில் இயற்கை முறையில் ரெண்டு ஏக்காலேயும் பெருநெல்லியை நட்டு, ஊடுபயிரா சப்போட்டாவையும் சாகுபடி செய்தேன்.நல்ல மகசூல் கிடைக்கவே.ஐம்பது ஏக்கரில் பெருநெல்லி போட்டுட்டேன். இன்னும் ஒரு சில மாதத்தில் அறுவடைக்குத் தயாராகிவிடும்”.
சாகுபடி முறை
நெல்லி சாகுபடிக்கு செம்மண் நிலம் ஏற்றது. அதிலும் மூன்று அடிக்கு கீழ் குறுஞ்சரல்கள் உள்ள மண்ணாக இருந்தால், மிகவும் நல்லது. கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை மே மாதமும், மற்ற மாவட்டங்களில் ஜுன், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களிலும் நடவு செய்யலாம்.நெல்லியை இயல்பான நடவு முறை, அடர் நடவு முறை என இரண்டு முறைகளில் நடவு செய்யலாம்.இயல்பான நடவு முறையில் செடிக்குச் செடி மற்றும் வரிசைக்கு வரிசை 18 அடி இடைவெளி இருப்பதுபோல நடவேண்டும்.இப்படி நடும்போது ஏக்கருக்கு 130 செடிகள் வரை நடலாம். அடர் நடவு முறையில் மரத்துக்கு மரம் மற்றும் வரிசைக்கு வரிசை பத்து அடி இடைவெளியே போதும்.இதில் ஏக்கருக்கு 430 மரங்கள் வரை நடலாம்.இயல்பு நடவு முறையில் நடவு செய்யும்போது இடைவெளி அதிகமாக இருப்பதால், ஊடுபயிர் சாகுபடி செய்யலாம்.
நெல்லியில் மூன்றாவது ஆண்டில் இருந்துதான் வருமானம் என்பதால்,முதல் இரண்டு ஆண்டுகளுக்கான பராமரிப்புச் செலவை ஈடுகட்ட, பயறு வகைகளைப் பயிர் செய்யலாம்.இதன் மூலம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து வருமானம் கிடைத்துக் கொண்டே இருக்கும்.பயறு வகைகளை அறுவடை செய்ததும் அதன் செடிகளையே நெல்லிக்கு மூடாக்காகப் போட்டு விடலாம்.மரவள்ளி, வாழை, சப்போட்டா எனவும் நடவு செய்து பராமரிப்புச் செலவுகளை ஈடுசெய்யலாம்.
‘நெல்லி சாகுபடிக்கு அதிக தண்ணீர் உள்ள நிலம் சரிப்பட்டு வராது, மூன்றடி ஆழம் மற்றும் மூன்றடி அகலத்துக்கு குழி எடுத்து,காய்ந்த இலை,சருகளைப் போட்டு அதன் மேல் மண்ணைப் போட்டு மூடவேண்டும்.அதற்கு மேல் பத்து கிலோ அளவு தொழுவுரத்தைக் கொட்டி,தோண்டி வைத்திருக்கும் மேல் மண்ணை போட்டு மூடிய பிறகு, நெல்லிச் செடியை நடவு செய்ய வேண்டும்.செடியைச் சுற்றி வட்டப்பாத்தி அமைத்து ஒரு கிலோ மண்புழு உரம் போடவேண்டும்.நடவு செய்த முதல் நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.தொடர்ந்து முதல் ஆறு மாதங்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாசனம் செய்யவேண்டும்.ஆறு மாதங்களுக்குப் பிறகு, செடிக்கு வாட்டம் இல்லாமல் அவ்வப்போது தண்ணீர் பாய்ச்சினாலே போதும்.
பெருநெல்லியைப் பொறுத்தவரை ஒவ்வொரு ரகமும் ஒவ்வொரு சமயத்தில் காய்ப்புக்கு வரும். அதற்கு ஏற்ற மாதிரி, காஞ்சன், கிருஷ்ணா, சக்கையா, என்.ஏ-7 என பல்வேறு ரகங்களையும் கலந்து நட்டால், ஆண்டு முழுவதும் வருமானம் பார்க்கலாம்.நெல்லியை நடவு செய்த நான்கு மாதங்களிலேயே பூ பூக்க ஆரம்பித்து விடும்.அவற்றை உதிர்த்து விடவேண்டும்.மூன்று வருடங்களுக்கு இப்படிச் செய்ய வேண்டும். அதன் பிறகு காய்ப்புக்கு அனுமதித்தால் நெல்லி ருசியாக இருப்பதுடன் மகசூலும் கூடும். நெல்லியின் ஆயுள் காலம் நாற்பது ஆண்டுகள்.ஆனால், ஒவ்வொரு பதினைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை காய்ப்புத் திறன் குறையும்.அந்த நேரத்தில் மரத்தின் பக்க கிளைகளை வெட்டி விட வேண்டும். மீண்டும் விரல் தடிமனுக்கு கிளை வந்ததும் காய்க்க ஆரம்பித்து விடும்.
ஒரு ஏக்கரில் பெருநெல்லியும், ஊடுபயிராக சப்போட்டாவும் சாகுபடி செய்ய மணியன்  சொல்லும் செலவு -வரவு கணக்கு
விவரம்
செலவு
வரவு
குழியெடுத்தல் 20 ரூபாய்  X 130 செடி
2,600
நாற்று
2,600
நடவு
2,000
நீர் பாய்ச்சுதல்
1,000
தொழுவுரம்
1,200
போக்குவரத்து
2,000
அறுவடை
2,500
சப்போட்டா குழி, நடவு
2,500
மகசூல்: நெல்லி 4 டன்  X கிலோ 20
80,000
சப்போட்டா
500 கிலோ X  கிலோ 30
15,000
மொத்தம்
16,400
95,000
நிகர லாபம்
78,600
குழியெடுத்தல், செடி, நடவுச்செலவு ஒரு முறை மட்டுமே. அடுத்தடுத்த ஆண்டுகளில் அவையும் வருமானத்தில் சேர்ந்து விடும். இவர் சப்போட்டா கன்றை அரசுத் தோட்டக்கலைத் துறையில் இருந்து இலவசமாக பெற்றுள்ளதால், அதற்கான செலவும் கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை (மேற்படி கணக்கு மணியன் சாகுபடி செய்யும் முறைகளை வைத்து கணக்கிடப்பட்டுள்ளது. இதை ஒப்பீட்டுக் கணக்காக மட்டுமே எடுத்துக் கொள்ளவும்).
நெல்லியை நடவு செய்த முதல் மூன்று ஆண்டுகளுக்கு மண்புழு உரம், கம்போஸ்ட் உரக்கலவையை மரத்துக்கு இரண்டு கிலோ வீதம், ஆறு மாதத்துக்கு ஒரு முறை வைக்க வேண்டும். நான்காவது ஆண்டில் மண்புழு உரம், கம்போஸ்ட் கலவையை மூன்று கிலோ வரை அடிப்பகுதியில்  இருந்து ஒன்றரை அடி தள்ளி குழியெடுத்து  அதில் போட்டு, மேல் மண்ணைப் போட்டு மூடிவிட வேண்டும். மண்புழு உரத்தில் உள்ள பதினாறு வகை நுண்ணுயிரிகள் வெயில்பட்டு செயல்படாமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால், மண் போட்டு மூடி விடுவதால் நுண்ணுயிர்களின் செயல்பாடு முழுமையாகக் கிடைக்கும். முதல் நான்கு ஆண்டுகளுக்கு இதேபோல் உரங்களைக் கொடுத்தாலே மண் வளமாகிவிடும். பிறகு எந்த உரமும் தேவைப்படாது. தோட்டத்தில் உள்ள புல், களைச் செடிகளைக் களைத்து செடிகளைச் சுற்றி மூடாக்கு போட்டுக் கொள்ளலாம். இதைத் தவிர வேறு எந்தப் பக்குவமும் தேவையில்லை.
நெல்லியைப் பொறுத்தவரை சாறுண்ணி, தண்டுத் துளைப்பான் தாக்குதல் அதிகமாக இருக்கும். சாறுண்ணிகள் இலையில் உள்ள பச்சயத்தைச் சுரண்டி விடுவதால், இலைகள் வெளிறிப் போய்விடும். தண்டுத் துளைப்பான், தண்டுக்குள் சென்று தங்கி விடுவதால் மகசூலும் குறைந்து விடும். பஞ்சகவ்யா அடிப்பதன் மூலம் சாறுண்ணிகளையும், தண்டுத் துளைப்பானையும் கட்டுப்படுத்தலாம். சாதாரணமாகவே தண்டுத் துளைப்பான்களை அடையாளம் கண்டுவிட முடியும். மரங்களில் இருக்கும் இவற்றை சிறிய குச்சியை வைத்துக் குத்தி, வெளியே எடுத்து விட வேண்டும். பொதுவாக,  பிப்ரவரி முதல் மே ஜுலை முதல் செப்டம்பா என ஆண்டுக்கு இரண்டு முறை அறுவடை செய்யலாம். பல்வேறு ரகங்களையும் கலந்து நட்டிருந்தால், ஆண்டு முழுவதும் அறுவடை இருக்கும். ஓராண்டுக்கு ஒரு ஏக்கரில் இருந்து சராசரியாக நான்கு டன் முதல் 5 டன் வரை மகசூல் கிடைக்கும். இயற்கை முறை விளைபொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் குறைந்த பட்சம் கிலோவுக்கு 20 ரூபாயும், அதிகபட்சமாக 40 ரூபாயும் கிடைக்கும்.
சப்போட்டாவுக்கு தனியாக எந்தப் பராமரிப்பும் தேவைப்படாது. நான்கு நெல்லிக்கு மத்தியில் ஒரு சப்போட்டா என்ற கணக்கில் நெல்லியைப் போலவே குழி எடுத்து நடவேண்டும்.
“நெல்லிக்கு ஊடுபயிரா சப்போட்டாவை நட்டு வைத்தது தவிர தனியாக எந்தப் பராமரிப்பும் செய்யவில்லை. உரமும் கொடுக்கிறதில்லை. நெல்லிக்கு மட்டும்தான் உரம். ஆனாலும் சப்போட்டா நல்ல மகசூல் கொடுத்து காண்டு இருக்கிறது. சாதாரணமாக சப்போட்டாவை கிலோ 5 ரூபாய்னு வெளிவியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள். இயற்கை விளைபொருட்களை விற்பனை செய்கிற கடைகளில் கிலோவுக்கு 25 முதல் 30 ரூபாய் வரைக்கும் கிடைக்கிறது.
தொடர்புக்கு
மணியன்,
தெரிசனங்கோப்பு
அலைபேசி: 94431-27132

வாழ்வு தரும் மரங்கள்

பத்து கிணறுகள் ஒரு குளத்திற்குச் சமம்
பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம்
பத்து ஏரிகள் ஒரு புத்திரனைத் தருவதற்குச் சமம்
பத்து புத்திரர்கள் ஒரு மரத்திற்குச் சமம்
எவர் ஒருவர் நற்கனிகள் பூத்துக் குலுங்கும்
நல்மரங்களை நடுகின்றாரோ அவரிடம்
தேவதைகளும் முனிவர்களும் தேவதைகளும் கந்தர்வர்களும்
மூன்று யுகங்களும் தங்கி அருள் புரிவர்
சுரபாலரின் விருஷ ஆயுர்வேதம்
சிறுவயதில் நட்டு வளர்த்த ஒரு மரத்தைத் தேடி 22 வருடங்களுக்கு முன்பாகக் குடியிருந்த வீட்டைத் தேடிச் சென்று அது இப்பொழுது வானுயுர வளர்ந்து நின்ற காட்சியைக் கண்டு சிலிர்த்து நின்ற பொழுது நானும் கூட வாழ்வில் ஏதோ உருப்படியான ஒரு காரியம் செய்திருப்பதாக சற்று பெருமிதம் அடைந்தேன். உனக்குத் தெரிந்த 50 மரங்களைப் பட்டியலிடு என்றால் நம்மில் பெரும்பாலோர் வேப்ப மரம், மா மரம், கொய்யா மரம், நெல்லி மரம், அரச மரம், ஆல மரம், பலா மரம், தேக்கு மரம், வாழை மரம், தென்னை மரம், பனை மரம் என்று தொடங்கி அதிக பட்சமாக ஒரு 20 மரங்களின் பெயர்களைச் சொல்லக் கூடும். அதில் பல மரங்களை இக்காலத் தலைமுறையினர் பலரும் பார்த்திருக்கக் கூட மாட்டார்கள். இன்னும் பல மரங்களை தினசரி நாம் நடந்து செல்லும் பாதையில் கண்டிருப்போம் ஆனால் அவற்றின் பெயரைத் தெரிந்து கொள்ள முயன்றிருக்கக் கூட மாட்டோம். இன்னும் பல மரங்களின் பெயர்களை நாம் அடிக்கடிக் கேள்விப் பட்டிருப்போம் ஆனால் அது எப்படி இருக்கும் எங்கு இருக்கும் என்றுத் தேடிப் போய் அறிந்து கொண்டிருக்க மாட்டோம். மரங்கள் என்று மட்டும் இல்லை, பறவைகள், பூச்சிகள், விலங்குகள், செடிகள் என்று நம் சுற்றுச் சூழலில் நாம் உறவாடும் எந்தவொரு உயிரினத்தை எடுத்துக் கொண்டாலும் நமது எல்லைகள் மிகவும் சுருங்கியவை என்பதை சற்று யோசித்துப் பார்த்தால் உணர்வோம். அப்படியெல்லாம் எளிதாக மறந்து போய் விடக் கூடாது அரிய வகை தாவரங்களையும், பறவைகளையும் பிற உயிரினங்களையும் நாம் தவற விட்டு விடக் கூடாது என்பதற்காகவே நம் பழம் இலக்கியங்களில் அவற்றையும் சேர்த்தேதான் பதிந்து வைத்திருக்கிறார்கள். சங்க இலக்கியங்களில் அடையாளம் சொல்லப் படும் பல வகை மரங்களையும், பறவைகளையும் நம்மால் இன்று துல்லியமாக அடையாளம் கண்டு சொல்லி விட முடியாது.
life_trees
‘எல்லா உயிரினங்களிலேயும் மிகச்சிறப்பானவை தாவரங்கள். ஆதவனின் ஒளிச்சக்தியை வேதிய ஆற்றலுடைய உணவுப்பொருட்களாக மாற்றும் தன்மை தாவரங்களுக்குத்தான் உண்டு. மனித இனமும், மற்ற விலங்குகளும் இந்த வேதிய ஆற்றலைப் பெறுவதற்காக நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாவரங்களைச் சார்ந்துள்ளன’
என்று குறிப்பிடுவதாக தமிழரும் தாவரமும் என்னும் நூலின் அறிமுகத்தில் நாஞ்சில் நாடனின் இந்த சொல்வனம் கட்டுரையில் குறிப்பிடுகிறார். அதே நூலில் ”தொல்காப்பியத்தில் 52 தாவரங்களும், சங்க இலக்கியங்களில் 207 தாவரங்களும், சங்கம் மருவிய காலத்தில் 185 தாவரங்களும், பக்தி இலக்கிய காலத்தில் 238 தாவரங்களும்” குறிப்பிடப்பட்டுள்ளன என்கிறார். நம் தலைமுறையினருக்கு எல்லாம் தாவரங்களின் பெயர்கள் கூட “பூவரசம் பூ பூத்தாச்சு” என்று பொண்ணுக்குச் சொல்லும் சேதியான திரைப்படப் பாடல்கள் மூலமாகவே அறிய வருகின்றன. பூவரச மரத்தையும் பூவையும் நேரில் பார்த்தவர்கள் குறைவாகவே இருக்கக் கூடும். பூவரச இலையிலே பீப்பீ செஞ்சு ஊதினோம் என்ற சென்ற தலைமுறையினரின் சிறுபிள்ளை விளையாட்டைக் கூட இன்னொரு திரையிசைப் பாடலே அறியத் தருகிறது. ட்ரை சைக்கிள், வித் ட்ரெயினிங் வீல் எல்லாம் குழந்தைப் பருவத்து விளையாட்டுச் சாமானாக கிடைக்க வழியில்லாத அந்தக் காலத்தில் நொங்கு உண்ணப் பட்ட பின் எறியப் படும் பனம் காய்களே மானசீகமான சைக்கிள்களாகவும் கார்களாகவும் விளையாட்டுச் சாமான்களாகப் புழங்கிய இருந்த காலத்தில் நொங்கு என்பது பனை மரத்தில் இருந்து விளைவது என்ற விபரமாவது தெரிந்திருந்தது. கருப்பு சிவப்பு நிறத்தில் மின்னும் அழகிய சிறு மணிகள் ப்ளாஸ்டிக் பொருள் அல்ல அவை விளைவது குன்றி மணி மரத்தில் இருந்து என்ற விபரம் விளையாட்டுப் போக்கில்தான் தெரிய வந்தது. இக்காலத்தில் கிராமப் பகுதி சிறுவர்கள் கூட காடு, மலை, நதி என அலைந்து திரிந்து விளையாடியும் அதன் மூலமாகச் சுற்றுச் சூழலை அறிந்து கொள்ளும் அனுபவத்திற்கான நேரமில்லாமலேயே டி வி யின் முன் வளர்கிறார்கள்.
அப்படி நம் இலக்கியங்கள் அடையாளப் படுத்திய பாடல் பெற்ற சிறப்புடைய இந்த நானூற்றி சொச்சம் மரங்களில் எத்தனை மரங்களை நாம் தற்காலத்தில் அறிவோம்? எத்தனை மரங்கள் இன்னும் உயிர்ப்புடன் வாழுகின்றன. எத்தனை அழிந்து போயின என்ற விபரங்கள் அரசாங்கத்தின் தோட்டக் கலை/வனத் துறை அலுவலர்கள் கூட அறிந்திருப்பார்களா என்பது தெரியாது. மதுரையைக் கடம்ப வனம் என்கிறார்கள் ஆனால் அந்த கடம்ப மரத்தை மீனாட்சி அம்மன் கோவிலின் உள்ளே வணங்கப் படும் ஒரு மரமாக அன்றி நான் மதுரைப் பகுதியில் வேறு எங்கும் கண்டிலேன். அப்படியே கண்டிருந்தாலும் இது கடம்ப மரம் என்ற விபரமே தெரிந்திருக்காது. நமக்கு ஏற்கனவே பரிச்சியமான ஒரு பத்திருபது மரங்களுக்கு அப்பால் எந்தவொரு தாவர இனத்தையும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது என்பதே உண்மை நிலமை. அந்த அளவுக் குறைந்த பட்ச தேவைக்கு மட்டுமே தெரிந்து கொள்ளும் அறிவுடனேயே நாம் வளர்க்கப் படுகிறோம். நம்மை வளர்த்த பெற்றோர்களும் ஆசிரியர்களும் கூட அந்த நிலையில்தான் பெரும்பாலும் இருந்தார்கள். ஒரு வேளை தாவரவியல் படித்த மாணவர்களுக்குக் கூடுதலாக ஒரு பத்து மரங்கள் தெரிந்திருக்கலாம். இப்பொழுது சிக்குன் குனியா, டெங்கு போன்ற வினோத நோய்கள் நாடு முழுவதும் பரவுகின்றன. உடனே அவற்றிற்கான மருந்துகள் அலோபதி துறையில் இன்னும் கண்டு பிடிக்கப் படவில்லை ஆகவே சித்த மருத்துவம் பரிந்துரைத்த மூலிகைக் கஷாயத்தையே நாங்களும் பரிந்துரைக்கிறோம் என்கிறார்கள் எம் டி, படித்த ஆங்கில மருத்துவர்கள். நில வேம்பு கஷாயம் குடித்தால் அந்த நோய் குணமாகிறது என்கிறார்கள். அந்த நிலவேம்புச் சூரணத்தையும் கஷாயத்தையும் தேடி மக்கள் ஓடுகிறார்கள். ஆனால் அந்த நில வேம்பு என்பது செடியா, மரமா என்பதைத் தெரிந்து கொள்வதில் எவருக்கும் ஆர்வமில்லை. நானும் வேம்பு என்றால் அது ஒரு வகை வேப்ப மரம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதை வளர்ப்பதற்காக கன்றுகளைத் தேடிச் சென்ற பொழுதுதான் ஒரு குறுஞ்செடி என்ற விபரம் தெரிய வந்தது. சில இலைகளைப் பறித்து சுவைத்தால் கடுமையான கொடும் கசப்பு நாக்கில் நீண்ட நேரம் தங்குகிறது. அது விஷ முறிவு மூலிகையும் கூட என்கிறார்கள். இவை போன்ற தகவல்கள் பாரம்பரியமாக செவி வழி அனுபவத்தின் மூலமாகக் கடத்தப் படும் செய்தியாக மட்டுமே கிராம மக்களின் அனுபவ அறிவாகவே நின்று விடுகின்றன. புற்று நோய் சிகிச்சையான கீமோதெரப்பிக்குப் பதிலாக ஒரு வகைப் பழத்தை உண்டால் பலன் கிடைக்கிறது என்றார்கள். அதைத் தேடிய பொழுது அந்த மரத்தின் தமிழ் அல்லது வட்டாரப் பெயரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அது சீத்தாப் பழத்தின் ஒரு வகை என்பது மட்டுமே தெரிந்தது. பின்னர் அதைத் தேடி கர்நாடக மாநிலத்தில் ஒரு பண்ணையில் வளர்க்கப் படுவதாக அறிந்தேன். இணையத்தில் ஒவ்வொரு தாவரத்தையும் தேடிக் கண்டறிவதற்குப் பதிலாக தாவரங்கள் குறித்த எளிய சுவாரசியமான புத்தகங்கள் இருந்தால் அவை ஆர்வமுள்ளவர்களிடம் எளிதில் சென்றடையக் கூடும். ஆனால் அவை போன்ற நூல்கள் அபூர்வமாகவே எழுதப் படுகின்றன, பதிப்பிக்கப் படுகின்றன.
காலப் போக்கில் மறைந்து விட்ட அல்லது அபூர்வமாகி விட்ட , ஓரளவுக்கு அதிகம் அறியப் பட்டிராத பல்வேறு பலன் தரும் மரங்களை வளர்க்க வேண்டும் என்று விரும்பினேன். அது காரணமாக அரிய வகை மரங்கள் சிலவற்றை அறிய விழைந்த பொழுது தமிழ் நாட்டின் முக்கியமான மரங்கள் குறித்தான முழுமையான ஒரு நூலைத் தேடிக் கொண்டேயிருந்தேன். ஏற்கனவே நாஞ்சில் நாடன் அறிமுகம் செய்திருந்த நூல் மறு பதிப்பைக் காணவில்லை என்று அறிந்தேன். மதுரைக்குச் செல்லும் பொழுது தவறாமல் டவுன் ஹால் ரோடு சென்ட்ரல் சினிமா அருகே அமைந்துள்ள நியூ செஞ்சுரி புக் ஹவுஸுக்கு செல்வதுண்டு. அவர்களின் பிரசார நெடி வீசும் புத்தகங்களையும் தாண்டி அன்றிலிருந்து இன்று வரை பல உருப்படியான நூல்களும் அங்கு கிடைப்பதுண்டு. சோவியத் யூனியன் செல்வச் செழிப்பாக இருந்த காலத்தில் கன்னம் சிவந்த குழந்தைகளும் மிருகங்களும் வெண் பனியில் விளையாடும் அழகான பனி மூடிய ஓவியங்களுடன் கூடிய சிறுவர் நூல்களை அங்கு சல்லிசான விலையில் என் அப்பா வாங்கித் தரப் படித்ததுண்டு. பின்னர் ஓம்ஸ் அருணாச்சலம் எழுதிய ரேடியோ ரிப்பேரிங், டிரான்ஸிஸ்டர் மெக்கானிசம், வீட்டு வயரிங் போன்ற பல அரிய நூல்களையும் என் சி பி எச் மூலமாகவே குறைந்த விலையில் வாங்கிப் படித்துப் பயனடைய முடிந்தது. அதே பழைய நினைவுகளில் இந்த டிசம்பரில் அங்கு சென்றிருந்த பொழுது நான் தேடிக் கொண்டிருந்த தலைப்பில் ஒரு நூலைக் கண்டு உடனடியாக வாங்கி விட்டேன். அது அரிஸ்டாடில் என்னும் திரு.ஆர். எஸ்.நாராயணன் அவர்கள் எழுதிய ”வாழ்வு தரும் மரங்கள்” என்ற நூல்.
banyan-tree
நாராயணன் எனக்கு ஏற்கனவே சொல்வனம் ஆசிரியர் பிரக்ஞை ரவிஷங்கர் மூலமாக அறிமுகம் ஆனவர். நான் மரம் வளர்ப்புத் தொடர்பான தகவல்களைத் தேடிக் கொண்டிருந்த பொழுது சொல்வனத்தில் இயற்கை வேளாண்மை குறித்தும், சூழலியல் குறித்தும் தொடர் கட்டுரைகள் எழுதி வரும் நாராயணன் அவர்களை ரவி அறிமுகப் படுத்தியிருந்தார். அவரது ஆலோசனைகளுக்காக ஒரு முறை தொடர்பும் கொண்டிருந்தேன். மரங்கள் வளர்ப்பது குறித்தும் இயற்கை விஞ்ஞானம் குறித்தும் ஆலோசனைகள் வழங்கி வருகிறார். காந்தி கிராமம் அருகேயுள்ள அம்பாத்துறையில் வசிக்கிறார். மத்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இயற்கை வேளாண்மையிலும், சூழலியலிலும் ஆர்வம் செலுத்தி ஆராய்ச்சிகளிலும் நூல்கள் எழுதுவதிலும் இயற்கை வேளாண் குறித்த பிரசாரங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் ஈடுபட்டு வருகிறார். வீட்டு மாடியில் தோட்டம் வளர்க்கும் முறையை பிரபலப் படுத்தி வருகிறார். இயற்கை வேளாண்மைக் களஞ்சியம், மாடியிலும் தோட்டமிடலாம் போன்ற நூல்களையும் எழுதியுள்ளார். சுரபாலரின் விருஷ ஆயுர்வேதம் என்ற நூலை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். அவர் தினமணி நாளிதழில் மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வுக்காக எழுதிய ”வாரம் ஒரு மரம்” என்ற கட்டுரைகளின் முதல் தொகுப்பாகவே “வாழ்வு தரும் மரங்கள்” வெளி வந்துள்ளது.
மரங்கள் குறித்த நூல் என்றால் ஏதோ நாம் பள்ளி, கல்லூரி காலங்களில் படித்த பாட்டனி பாட நூல்கள் போல கடினமாகவும் வறட்சியாகவும் இல்லாமல் மிகவும் சுவாரசியமான நடையில் ஒவ்வொரு மரம் குறித்தும் முழுமையான தகவல்களுடனும் ஏராளமான சுவாரசியமான உப தகவல்களுடனும் இந்த நூலை எழுதியுள்ளார். அரச மரம், ஆல மரம் துவங்கி கோங்கு மரம் வரையிலான 78 மரங்கள் குறித்தான முழு விபரங்கள் அடங்கிய சுவையான கட்டுரைகளின் தொகுப்பே வாழ்வு தரும் மரங்கள். ஒவ்வொரு மரம் குறித்தும் அவற்றின் தாவரவியல் பெயர், சமஸ்கிருத மொழி மற்றும் இலக்கியங்களில் அவற்றிற்கு வழங்கப் பட்ட பெயர், ஹிந்தியில் அதன் பெயர், ஆங்கிலப் பெயர் ஆகிய தகவல்களுடன் ஒவ்வொரு மரம் குறித்தான கட்டுரையையும் துவக்குகிறார். பின்னர் அந்த மரம் குறித்தான் புராணத் தொடர்புடைய செய்திகள், அந்த மரம் எந்த ஆலயங்களின் தல விருட்சம் போன்ற விபரங்கள், மரம் தொடர்பான இலக்கியக் குறிப்புகள், மரத்தின் மருத்துவப் பயன் பாடுகள், சமூகப் பயன் பாடுகள், மரம் வளரத் தேவையான இடம், மண், தட்ப வெட்ப நிலை குறித்த விபரங்கள், அந்த மரத்தினால் விளையும் சுற்றுச் சூழல் பயன்பாடுகள், அந்த மரம் குறித்த சுவாரசிய செய்திகள், அந்த மரக் கன்று எங்கு கிடைக்கும் போன்ற தகவல்கள், மரம் வளர்ப்பதற்குத் தேவையான குறிப்புகள், மரத்தின் உணவு பயன்பாடுகள் அந்த மரத்தினால் ஏற்படும் சூழலியல் தாக்கங்கள்,அந்த மரம் தோன்றிய நாடுகள் அல்லது இடங்கள், அந்த மரத்தினால் பயனடையும் பறவைகள், விலங்குகள், மரத்தின் உயர, அகல அளவுகள் போன்ற எண்ணற்றச் செய்திகளை ஒவ்வொரு கட்டுரையிலும் அடர்த்தியாகத் தந்து செல்கிறார். மரத்தைப் பற்றிய சித்தர்களின் குறிப்புகளையும், ரசாயனக் குறிப்புகளையும் பரத கண்டத்தின் பண்பாட்டுக் கூறுகளுடன் இணைந்து விளக்குகிறார். ஒவ்வொரு மரம் குறித்து படித்து முடிக்கும் பொழுதும் அந்த மரம் மீது நமக்கு பிரமிப்பும் பக்தியும் பாசமும் ஏற்பட்டு விடுகின்றன. நாம் இது வரையிலும் கேள்விப்பட்டிராத கண்டிராத ஏராளமான மரங்கள் குறித்த தகவல்களையும் அள்ளித் தருகிறார். ஒவ்வொரு தாவரமும் இயற்கையின் எண்ணிலடங்காத அதிசயங்களைத் தன்னுள் கொண்டு இந்த பூவுலகம் உயிர்ப்புடன் இருப்பதற்கு எந்த வகையில் உதவுகிறது என்பதை ஒவ்வொரு மரத்தின் தகவல்கள் மூலமாகவும் ஆசிரியர் விளக்குகிறார். இந்த நூலைப் படித்து முடிக்கும் ஒவ்வொருவரும் உடனடியாக ஒரு மரக்கன்றையாவது நட்டு விட்டே அடுத்த வேலைக்குச் செல்வார் என்பது உறுதி. சில மரங்களின் பயன்பாடுகளைப் படிக்கும் பொழுது அதை நம் சூழல்களில் கண்டிருந்தாலும் அதன் அருமை தெரியாமல் வளர்ந்திருக்கிறோமே என்ற வெட்கமே ஏற்படுகிறது.
கீழ்க்கண்டவை போல ஏராளமான தகவல்கள் அடர்ந்த மரத்தின் இலைகள் போலச் செறிவுடன் நூல் முழுவதும் காணக் கிடைக்கின்றன.
‘மரங்களில் நான் அரச மரமாக இருக்கிறேன்’ என்று கிருஷ்ணன் கூறுகிறார்.
ஒரு அரச மரம் நட்டால் ஒரு ஆண்டு சொர்க்க லோக பதவி கிட்டும் என்று விருஷ ஆயுர்வேதத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறதாம்.
பல ஆண்டு கால சொர்க்கலோக வாசத்துக்கு பல அரச மரங்கள் நட வேண்டும். அதிக அளவில் ஆக்ஸிஜன் தரும் மரமாக அரச மரம் விளங்குகிறது. பிள்ளை வரம் வேண்டுவோர் அரச மரத்தைச் சுற்றச் சொல்லியிருப்பதன் மருத்துவ காரணங்கள் உள்ளன.
அரச மரத்தின் அதிக பிராணவாயுவினால் சுவாசம் சுத்தமடைகிறது, அதனால் எண்ணம் சுத்தமடைகிறது அதனால் புத்தி தெளிவாகிறது, ஞானம் பிறக்கிறது. புத்தருக்கு ஞானம் அளித்த போதி மரம் என்பது ஒரு அரச மரமே என்றும் அதன் காரணமாகவே அரச மரத்தின் அடியில் அமர்ந்து கிராம பஞ்சாயத்துகளில் நீதி வழங்கினார்கள்.
ஆல மரம் வாக்கின் அடையாளம் என்றும் அதன் காரணமாகவே வணிகர் ஜாதியினரான பனியாக்கள் அதன் அடியில் கூடி தங்கள் வணிகத்தை நடத்தினார்கள் என்றும் அதன் காரணமாகவே அது ஆங்கிலத்தில் பான்யன் ட்ரீ என்று அழைக்கப் பட்டிருக்கிறது. ஆல மரம் மேகங்களை ஈர்த்து அதிக மழையை தருவிக்கக் கூடியவை, அதன் காரணமாக ஆல மரங்களை நிறைய வளர்க்க வேண்டியவை.
சாஸ்திர முறைப் படி இரண்டு ஆல மரங்களை நடுபவர்களுக்கு கைலாயத்தில் ஒரு இடமும் கூடவே கந்தர்வ கன்னியரும் கிடைப்பார்கள் என்றும் விருஷ ஆயுர்வேதம் நூல் சொல்கிறது.
மேலோகத்தில் கன்னியர் கிடைப்பதற்காக எவரும் பயங்கரவாதச் செயல்களில் இறங்க வேண்டியதில்லை இரண்டு ஆல மரத்தை மட்டும் நட்டாலே போதும் போலிருக்கிறது. ஆலம்பால் வயேகரா போலப் பயன் பட்டதே அந்த கன்னியர்கள் கிட்டும் ரகசியம்.
மேகங்களை இழுக்கும் சக்தியுள்ள இன்னொரு மரமாக இலுப்பை மரத்தையும் அது ஏன் ஆலையில்லா ஊருக்குச் சர்க்கரையானது என்பதைப் பற்றியும் கூறுகிறார். தமிழ் நாட்டில் அருகி வரும் இந்த இலுப்பை மரம் அவசரமாக மிக அதிக அளவில் மீண்டும் வளர்க்கப் பட வேண்டியதன் அவசியம் இலுப்பை மரத்தின் மகிமைகளைப் படிக்கும் பொழுது புரிகிறது.
அரசு ஆண் மலடை நீக்கும் வல்லமை உடையதினாலும் வேம்பு பெண் மலடை நீக்கும் வன்மையுள்ளது என்பதினாலும் அரசுக்கும் வேம்புக்கும் திருமணம் செய்யும் ஃபெர்டிலிடி ரைட்ஸ் உருவானது.
நூறு ஆண்டுகள் வாழ்வதற்கு வேப்ப மரப் பட்டையின் கஷாயம் அருந்த வேண்டும்.
நெட்டிலிங்க மரங்களே தமிழ் நாட்டில் அசோக மரங்களாக கருதப் படுகின்றன. உண்மையான அசோக மரங்கள் இலங்கையில் இருந்து தருவிக்கப் பட்டு தமிழ் நாட்டில் வளர்க்கப் பட வேண்டும்.
இப்படி மரங்கள் குறித்தான எண்ணற்ற செய்திகள் ஒவ்வொரு மரத்தின் மீதும் பெரும் மரியாதையையும், பிரமிப்பையும் அளிக்கின்றன. தமிழ் நாட்டில் பெய்த மழை அளவிலேயே அதிகமாக பெய்த இடம் திருவாலங்காடு. திருவாலங்காட்டின் தல விருட்சம் ஆல மரம் என்பதும் ஆல மரங்கள் நிறைந்த இடத்தில் அதிக மழை பெய்தது இயற்கைதான் போலிருக்கிறது. நாம் சாதாரணமாக எதிர் கொள்ளும் வேப்ப மரத்தின் பயன் பாடுகள் பிரமிக்க வைக்கின்றன. புங்கை மரத்தை அதிகம் வளர்ப்பதினால் தமிழ் நாட்டின் பயோ எரிபொருள் தேவையில் தன்னிறைவை அடையலாம் என்கிறார். பெட்ரோல் டீசல் விலையேற்றத்தைச் சமாளிக்க புங்கை மரத்தை அதிக அளவில் வளர்த்து புங்கை எண்ணெய் தயாரிப்பது ஒரு மாற்றாக அமையும் அதே நேரத்தில் மழையையும் பெற்றுத் தரும் போன்ற தகவல்கள் தமிழ் நாட்டு அரசு அவசியம் கவனிக்க வேண்டியவை.
ஒரு அரசு, ஒரு வேம்பு, ஒரு ஆல், பத்து புளி, முக்கூட்டாக வில்வம், விளா, நெல்லி அருகருகே நட்டுக் கூடவே ஐந்து மாமரங்களையும் நடுவோர் நரகத்துக்குப் போக மாட்டார்கள் என்று விருஷ ஆயுர்வேதம் சுட்டுகிறதாம். அந்தக் காலத்தில் இவை போன்ற சுலோகங்கள் மூலமாகவே சூழலியலைப் போற்றி வளர்த்திருக்கிறார்கள் என்று இந்த நூலைப் படிக்கும் பொழுது தெரிகிறது. சொர்க்கம் நரகம் என்பதெல்லாம் நாம் வாழும் சூழலே என்பதையும் நம் வாரிசுகளின் நன்மைக்காகவே இந்த பூமியை நாம் விட்டுச் செல்கிறோம் என்ற உண்மையையும் அவை உணர்த்துகின்றன. மரம் வளர்ப்பதினால் சொர்க்கத்தையும் நம் வாரிசுகளை மரமில்லாத நீரில்லாத மாசடைந்த நரகங்களில் இருந்தும் காக்கிறோம். தில்லையம்பலமான சிதம்பரத்தின் தல விருட்சம் தில்லை என்னும் மரம். இன்று அம்பலத்தில் நடராஜர் மட்டுமே ஆடுகிறார் ஆனால் தில்லை மரங்கள் மட்டும் அம்பேல் ஆகி விட்டது என்று மறைந்து விட்ட தில்லை மரத்தின் அருமைகளை அடுக்குகிறார். தில்லை மரம் ஒரு பாலுணர்வு ஊக்கி மரம் என்றும் அவற்றை அலையாற்றி மரங்களாக கடற்கரைகளில் வளர்த்தால் அவை சுனாமி தடுப்பாகவும் எரிசக்தி அளிக்கும் வளங்களாகவும் அமையும் என்கிறார். செஞ்சந்தன மரம் அணுக்கதிர் வீச்சைத் தடுக்க வல்லது என்றும் மோசஸ் சினாய் ஏரியில் வீசி எறிந்து நீரைத் தூய்மை செய்த மரத் தடி செஞ்சந்தன மரமாகவே இருக்க வேண்டும் என்கிறார். கல்பாக்கம், கூடங்குளம் பகுதிகளில் ஒரு பாதுகாப்பிற்காக செஞ்சந்தன மரத்தை அதிகம் நடலாம் என்ற யோசனையையும் அளிக்கிறார் நாராயணன். மகிழ மரத்தை பூர்வீக வயேகரா என்றழைக்கிறார்.
நாம் அதிகம் அறிந்திராத கண்டிராத மரங்களான மருதம், சேராங்கொட்டை, செம்மந்தாரை, தான்றி மரம்,வெப்பாலை, வன்னி, வாதநாராயணம், கடம்பு, புன்னை, நொச்சி,வேள்வேல்,தழுதாழை,ஆனைப்புளி, பதிமுகம், மகோகனி, சிறுநாகப்பூ, தோத்தாங்கொட்டை, எட்டி, இயல்வாகை ஆகிய அரிய வகை மரங்களின் மருத்துவ, சுற்றுச் சூழல் முக்கியத்துவங்களை விளக்கி அவற்றை நாம் அதிக அளவில் வளர்த்து மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை விளக்குகிறார். மரங்களின் தலைப்பிலேயே அதன் தன்மையை சுருக்கமாக விளக்கி விடுகிறார்.
நெல்லி-இந்தியாவின் எதிர்காலம்,
மருதம்-இதய நோய் நீக்கி,
வெப்பாலை-பல நோய் நிவாரணி,
முருங்கை-தாதுபுஷ்டி மரம்,
வேள்வேல்-மேக நிவாரணி,
கொய்யா-ஏழைகளின் ஆப்பிள்,
கருங்காலி-கருப்பு வைரம்
போன்ற தலைப்புகளே அந்தந்த மரங்களின் மேன்மையை விளக்கி விடுகின்றன. சில மரங்களை வளர்ப்பதன் வணிகப் பயன்பாடுகளையும் அவற்றின் மூலமாக ஈட்டப் படும் லாபத்தினையும் குறிப்பிட்டு அந்த வகை பணங்காய்ச்சி மரங்களை வளர்ப்பதையும் ஊக்குவிக்கிறார்.
நூலின் பின் இணைப்பாக மரங்களின் படங்கள், மரங்களின் மருத்துவக் குறிப்புகள், அவரவர் ராசி/நட்சத்திரங்களுக்கு ஏற்ற மரங்கள், மரக் கன்றுகளைப் பெறும் விபரங்கள் ஆகியவற்றை அளித்துள்ளார். இந்த நூலைப் படித்த பின்னர் தேடிப் பிடித்து மருதம், கடம்பு, செஞ்சந்தனம், எட்டி, மகோகனி, சந்தன வேம்பு, சரக் கொன்றை போன்ற அரிய வகை மரங்களாக 25 மரங்களை எனது தோட்டத்தில் நடுவதற்கு ஏற்பாடுகள் செய்து விட்டு வந்தேன். இந்த நூலைப் படிக்கும் ஒவ்வொருவரும் ஒரு மரத்தையாவது நட்டு நம் நாட்டின் பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்பதையே ஆசிரியரின் விருப்பமாக வைக்கிறார். மரங்களை வாழ்வியல் கண்ணோட்டத்தில் அணுகி அவற்றின் நுட்பமான மேன்மைகளை மிக எளிய அழகான சுவாரசிய்மான நடையில் தருகிறார் ஆசிரியர் நாராயணன். வாழ்வு தரும் மரங்கள் நூல் சுற்றுச் சூழலில், இயற்கை வேளாண்மையில், இயற்கை மருத்துவத்தில் ஆர்வமுள்ள ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய நூலாகும். நான் எவருக்கேனும் பரிசாக ஒரு நூலை அளிக்க விரும்பினால் இந்த நூலையும் கூடவே ஒரு மரக்கன்றையும் அளிக்கவே விரும்புவேன். இந்த நூலைப் படிப்பவர் நிச்சயமாக அந்தக் கன்றை தன் கண் போலப் பாவித்து ஒரு மரமாக வளர்த்து விடுவார் என்று உறுதியாக நம்புகிறேன். வாழ்வு தரும் மரங்களைப் படித்து, அறிந்து கொள்வதோடு நின்று விடாமல் அவற்றை வளர்ப்பதும் நம் ஒவ்வொருவர் கடமையுமாகும்.
தாமரை பப்ளிக்கேஷன்ஸ் பதிப்பான இந்த ”வாழ்வு தரும் மரங்கள்” நூலின் இரண்டாம் பதிப்பு என் சி பி எச் நிறுவனத்தாரின் கடைகளில் விற்பனை செய்யப் படுகிறது. விலை ரூ.160.
- See more at: http://solvanam.com/?p=24498#sthash.xm62sqi6.dpuf