இறைச் சிந்தனை, தியானம் போன்றவற்றில் உங்கள் மனத்தைத் தொடர்ந்து ஈடுபடுத்துங்கள். இந்த வழியில் கிடைக்கிற அறிவும் தெளிவும் புத்தகப் படிப்பினால் கிடைக்க முடியாதவை.
உங்கள் மனம் இப்படிப்பட்ட கடினமான பயிற்சியில் ஈடுபடவில்லை என்றால் - அல்லது அதனை நீங்கள் ஈடுபடுத்தவில்லை என்றால் அது வேலை இல்லாத நிலைமைக்கு வந்து விடும். வேலை இல்லாத மனம் ஷைத்தானின் தொழிற்சாலையாகும்.
மனிதனை இறைவன் பக்கம் திரும்பவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிற தீமைகளில் பெரும் பகுதி அறவே வேலையில்லாதவர்களாலும் இருக்கிற வேலையை ஒத்திப் போட்டு விட்டு வேலையில்லாத நிலைமைக்கு வந்தவர்களாலும் தான் உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன.