🌿அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
🌿காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
🌿சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
🌿பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.
🌿கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
🌿மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
🌿குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.
🌿அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.
🌿புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
🌿பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
🌿பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
🌿பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
🌿சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
🌿வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.
🌿முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
🌿வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.
🌿முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
🌿புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.
🌿புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
🌿நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்.
🌿தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.
🌿முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.
🌿முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.
🌿பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
🌿புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
🌿மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
🌿மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
🌿முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
🌿சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.
🌿வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
🌿தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
🌿தவசிக்கீரை- இருமலை போக்கும்.
🌿சாணக்கீரை- காயம் ஆற்றும்.
🌿வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.
🌿விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.
🌿கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும்.
🌿துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.
🌿துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
🌿காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
🌿மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.
🌿நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.
ஞாயிறு, 29 நவம்பர், 2015
40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்
(25 Nov) " " . ? . , " ?" . .. . . . . " . ?" . " .., . ?" . , ".. . . " . . " . . ." . . , , " . . .?" , " . . . " . , . " . . ." . . . , . . " ?" . , . . . " . " . "" . " " .. . , !
. " . ?" .
" .., . ?" .
, ".. . . " . .
" . . ." .
. , , " . . .?" , " . . . " .
, . " . . ." .
. . , . . " ?" .
, . . .
" . " .
"" .
" " .. . , !
புதன், 25 நவம்பர், 2015
நெல், பப்பாளி, காய்கறிகள், அழகுச் செடிகள்...
அண்மையில் ஈரோட்டில், பசுமை விகடன் நடத்திய ‘அக்ரி எக்ஸ்போ-2015’ல் கலந்து கொண்டு, தமிழ்நாட்டு விவசாயிகள் மனதிலும் இடம்பிடித்தார். இவர் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றி முடித்தவுடன், ‘‘இவரது பண்ணைக்குச் சென்று, பசுமை விகடனில் விரிவாக எழுதுங்கள்...’’ என வாசகர்கள் தரப்பில் அன்புக் கோரிக்கை வைக்கப்பட்டது.
திங்கள், 16 நவம்பர், 2015
கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.
கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.
🌾”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன
தெரியும்? நீ நினைத்தபோது மழையை
அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை
வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது.
🌾பேசாமல்,
இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!”
என்றான்.
🌾கடவுள் உடனே,
“ அப்படியா? சரி. இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப்
போய்விட்டார்.
🌾விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.
🌾அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது.
🌾”மழையே பெய்” என்றான்.
🌾பெய்தது.
🌾நிறுத்தச் சொன்னபோது,
மழை நின்றது.
🌾ஈரமான நிலத்தை உழுதான்.
🌾தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து, விதையை தூவினான்.
🌾மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன.
🌾பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது.
🌾வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது.
🌾அறுவடைக் காலமும் வந்தது.
🌾விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான்.
🌾அதிர்ந்தான்.
🌾உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது.
🌾அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை.
🌾”ஏ கடவுளே!” என்று கோபத்தோடு கூப்பிட்டான்.
🌾“மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன்! ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்?” எனக்கேட்டான்.
🌾கடவுள் புன்னகைத்தார்:
“என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக்கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும்.
🌾மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும்.
🌾போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும்.
🌾எல்லாமே வசதியாக
அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது.
🌾தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை!” என்றார்.
🌾வேண்டாமய்யா, உன் மழையும் காற்றும்! நீயே வைத்துக்கொள்” என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி.
🌾பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும்.
🌾இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது.
🌾பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது.
🌾பிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்?
🌾எதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்.
நீதிக்கதை"
பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். தாகத்தால் உயிர் போய்விடுமோ என்று நினைத்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.
அங்கே ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப்பும், அதன் அருகில் ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."
அந்தப் பம்ப்போ மிகவும் பழையதாக இருந்தது. அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.
அவன் யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால், இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போகத் தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.
அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.
நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது.
"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?