புதன், 30 நவம்பர், 2016
செவ்வாய், 29 நவம்பர், 2016
ஈஎம் திரவம்
ஈஎம் திரவம் நீரில் கலந்து கூண்டில் தெளித்தால் கிருமிகள் துர்நாற்றம் ஒழிக்கப்படும் கோழிக்கு குடிநீரில் கலந்து வைத்தால் கூடுதல் பசி சுறுசுறுப்பு நோயெதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. நான் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறேன். ஆக்டிவேட்டேட் ஈ எம் திரவம் எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்
1.ஈ எம் 1 லிட்டர்
2.குளோரின் கலக்காத தண்ணீர்.. போர் தண்ணீர் நல்லது [ஆர். ஓ தண்ணீரும் தவிர்க்கவும்] 20 லிட்டர்
3.ரசாயனம் சேர்க்காத வெல்லம்…பனங்கருப்பட்டி மிக நல்லது…தனி கரும்புசாறும் பயன் படுத்தலாம் 1 கிலோ
செய்முறை.
ஒருகிலோ வெல்லத்தை நன்கு கரைத்து எடுக்கவும் ,இதற்கு நாம் ஏற்கனவே வைத்துள்ள தண்ணீரில் தேவையான அளவு பயன் படுத்தவும்.மீதம் உள்ள தண்ணீர் .,1 லிட்டர் ஈஎம்,அனைத்தையும்காற்றுபுக முடியாத பிளாஸ்டிக் பாத்திரத்தில் ஒரு வாரம் வைக்க வேண்டும்.அப்போது உறங்கும் நிலையில் உள்ள நுண்ணுயிர்கள் உயிர் பெற்று வளரத்துவங்கும்.அதன் எண்ணிக்கை பல மடங்குகளாகும்.இந்த செயலினால் பிளாஸ்டிக் கலனில் வாயு உருவாகும்.தினசரி அதன் மூடியை திறந்து அந்த வாயுவை வெளியேற்ற வேண்டும்.
பயன் படுத்தும் முறை
இந்த இரண்டாம் நிலை திரவத்தில் ஒரு லிட்டருக்கு 200 லிட்டர் தண்ணீர்கலந்து பயன் படுத்தலாம்.இது கால் நடை தீவன பயிர்களில் தெளித்தால் நல்ல வளர்ச்சி ஊக்கியாக பயன் படும்.தொழுவத்தில் தினசரி தெளித்து வந்தால் ஈக்கள், கொசு போன்றவைகளின் தொந்தரவு குறைக்கப்படும்.தொழுவத்தின் துர்நாற்றம் குறையும்
ஈஎம் பொக்காஷி எனும் தவிடு உணவு தயாரிக்கும் முறை,தேவையான அளவு தவிடு எடுத்துக்கொண்டு அதில் ஏ.ஈ.எம் எனும் இரண்டாம் நிலை திரவத்தை தவிடு புட்டு பதம் வரும் வரை கலந்து இதனை காற்றுப்புகாமல் பிளாஸ்டிக் பாயில் கட்டி வைக்க வேண்டும்.ஒருவாரம் சென்றபின் திறந்து பார்க்கும் போது மேல் மட்டத்தில் வெள்ளை நிறத்தில் பூசனம் படர்ந்திருக்கும். இது நல்ல பக்குவத்தை குறிக்கும் அறிகுறி.இதனை நிழலில் உலர்த்தி கோழி ஆடு மாடு போன்றவைகளுக்கு உணவாக கொடுக்கலாம்…
ஒருலிட்டர் தாய் திரவம் சுமார் 300 ரூபாய் வரும்.இதனை சுமார் ஆறு மாதம் வரை பயன் படுத்தலாம்.இரண்டாம் நிலை திரவத்தை 30 நாட்கள் வரை பயன் படுத்தலாம்.வாங்கியவுடன் 1 லிட்டர் தாய் திரவத்தையும் பயன் படுத்த வேண்டாம்.நம்முடைய தேவை பயன் பாட்டுக்கு ஏற்ப 100 மில்லி அல்லது 200 மில்லி தாய் திரவத்தை பயன் படுத்தி இரண்டாம் நிலை திரவம் தயார் செய்யுங்கள்..நம் தேவைக்கு ஏற்ப தொடர்ந்து இரண்டாம் நிலை திரவம் கிடைக்குமாறு திட்டமிடுங்கள்.
நான் எனது மண்ணில்லா தீவன வளர்ப்பிற்கும்,தொழுவத்தில் தெளிப்பதற்கும்.கோழிகளுக்கு குடிநீரில் கலப்பதற்கும் தொடர்ந்து பயன் படுத்துகின்றேன்..நல்ல பலன் தான் கொடுக்கின்றது.
திங்கள், 28 நவம்பர், 2016
கோழிகளை விசப்பூச்சிகலிடமிருந்து காத்திட
கோழிகளை விசப்பூச்சிகலிடமிருந்து காத்திட/////////////////
1.சிறியாநங்கை செடியை வளர்த்து வந்தால் பாம்பு எட்டிப்பார்க்காது. அதாவது சிறியாநங்கை இலை மீது பரவி வரும் காற்று பாம்பின் மீது பட்டால் அதன் செதில்கள் சுருங்கி விரியாது. இதனால் பாம்பால் செயல்பட முடியாமல் போய்விடுமாம்
2.கோழி வளர்க்கும் இடத்தில் வான்கோழி மற்றும் கின்னிக்கோழி ஒன்று அல்லது இரண்டு வளர்க்கலாம். கோழி வகைகளில் வான்கோழியும், கின்னிக்கோழியும் மட்டும் சற்று வித்தியாசமானவை.பொதுவாக கின்னிக்கோழியை வளர்ப்பதற்கு தனித்திறமையே வேண்டும் என்பார்கள். ஏனெனில் கின்னிக்கோழிகளின் முழுநேர வேலையே இரையை அரைத்துக் கொண்டு இருப்பது தான்.ஆனால், அதே நேரத்தில் கின்னிக்கோழிகள் வளர்க்கப்படும் இடத்தில் காட்டுப்பகுதியாக இருந்தாலும் மனிதர்கள் தைரியமாக நடமாட முடியும் மற்றும் வாழவும் முடியும். ஒருவகையில் சொல்லப் போனால் நாயின் செய்கைகளில் ஒருசில குணங்கள் கின்னிக்கோழிகளிடம் உண்டு .. இவற்றில் முக்கியமான ஒன்று கின்னிக்கோழிகள் வளரும் வீட்டிற்கு அருகில் விஷம் கொண்ட பாம்புகள் உள்பட விஷஜந்துகள் எதுவந்தாலும் எளிதில் அடையாளம் கண்டுகொண்டு எஜமானர்களுக்கு எச்சரிக்கை மணியாக கத்திக்கொண்டே இருக்கும். இதுமட்டுமின்றி வீட்டில் பழகிய நபர்களை தவிர வேறுயாராவது புதிய மனிதர்கள் வந்தாலும் கூட கின்னிக்கோழிகள் தங்களது கடமையை செய்ய தவறுவதில்லை…இது எழுப்பும் வித்தியாசமான சத்தத்தால் ஒருவிதமான அலைகள் உருவாகின்றன.. இதனால் அந்தபக்கம் பாம்புகள் வருவதில்லை.. முயற்சி செய்து பார்க்கவும்…நன்றி.. வாழ்த்துக்கள்.
புதன், 23 நவம்பர், 2016
Disease
Diseas
இனிய காலை வணக்கம் தோழமைகளுக்கு,
Tetracycline அல்லது neosporine கண் மருந்து விலங்கு மருந்து கடைகளில் கிடைக்கும் வாங்கி தடவலாம், பயப்பட தேவை இல்லை விரைவாக பரவக்கூடிய நோய் அல்ல இதை தனிமை படுத்துங்கள் மற்ற கோழிகளுக்கு பரவாமல் இருக்க.
இயற்கை முறை என்றால் மஞ்சள் கட்டி வேப்பங்கொழுந்து சிறிதளவு கற்பூரம் அரைத்து தேய்க்கலாம் இந்த நோய் ஒரு வாரம் முதல் இரண்டு வாரம் வரை இருக்கும்.
இரண்டு கண்ணு முடிய கோழிகளுக்கு தீவனம் மற்றும் நீர் நாம் ஊட்ட வேண்டும்.
நன்றி/சிவா
வியாழன், 9 ஜூன், 2016
வெற்றி விவசாயிகளின் அசத்தல் அனுபவத் தொடர் பண்ணைக் கோழிகளுக்கு பஞ்சகவ்யா.
பண்ணைக் கோழிகளுக்கு பஞ்சகவ்யா...